தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
X

முதலமைச்சர் ஸ்டாலின்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

அதன்படி, 8.33 % போனசாகவும், 1.67 % கருணைத்தொகையாகவும் ஆக மொத்தம் 10 சதவீதம் போனசாக வழங்கப்படும். இதன் மூலம், 2, 87, 250 தொழிலாளர்கள் பலன் பெறுவர். இதற்கென, ரூ.216.38 கோடி செலவாகும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!