தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலா ஏற்பாடு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் குளிர்சாதன பஸ் (மாதிரி படம்)
சென்னை:
தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில்இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஏற்கனவே தினசரி சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டு நல்லமுறையில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இதனைக் கருத்திற் கொண்டு தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்,ஏற்கனவே சென்னையில் இருந்து தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் திருப்பதிக்கு தினசரி சுற்றுலா சிறப்பாக இயக்கப்படுகிறது. தற்போது முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல் படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில்இருந்து இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ள இடங்களிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் இம்மாதம் 8 ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இச்சுற்றுலாவில் புக் செய்யும் பயண டிக்கெட்டில் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவஉணவு, குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி, மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் உட்பட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி திருச்சியில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.3,330ம், சிறியவர்களுக்கு ரூ.3000ம்,சேலத்தில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.3,330ம், சிறியவர்களுக்கு ரூ.3000ம்,மதுரையில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.4,000ம், சிறியவர்களுக்கு ரூ.3,700ம்,கோவையில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.4,000ம், சிறியவர்களுக்கு ரூ.3,700ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசு வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu