கொரோனாவால் பெற்றோரைஇழந்த குழந்தைக்கு ரூ.5லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத் தொகை வழங்கப்படும். 18 வயது நிறைவடையும்போது அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும்.
கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழக்கும் குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
உறவினர்கள், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu