சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்படுகிறது

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்படுகிறது
X

சென்னை சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை ரூ.139 கோடியில் புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சர்வதேச தரத்திலான மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரூ.139 கோடியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62,000 சதுர அடியில் இருந்து 77,000 சதுர அடியாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமரலாம் என கூறப்படுகிறது.

விரிவாக்கம் மற்றும் திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி அரசுப் பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த சேப்பாக்கம் மைதான நிர்வாகம் ரூ.20 லட்சம் வழங்குகிறது. அடையாற்றை தூய்மைப்படுத்த ரூ.25 லட்சம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் வழங்குகிறது. பக்கிங்காம் கால்வாய் தூர்வார சேப்பாக்கம் மைதானம் நிர்வாகம் சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story
microsoft ai business school certificate