சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை: காவல் ஆணையர்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல், பெண் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவலர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை குறித்த 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளது. ஸ்டிங் ஆப்பரேஷனை பொறுத்தவரை, சென்னையில் 717 இடங்களில் சோதனை நடத்தி சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடிகளின் வீடுகளில் இருந்து 13 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகளில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சென்னையில் கொலை சம்பவங்கள் முன்பைவிட குறைந்துள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu