வெளிநாட்டில் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவ பணி தொடங்க அனுமதி!

வெளிநாட்டில் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவ பணி தொடங்க அனுமதி!
X
வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் உடனடியாக தங்கள் பணியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பை முடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பும்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற வேண்டும். அவ்வாறு பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணியாற்றிய பிறகே மருத்துவ பணி தொடர வேண்டும்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த 2 விதிகளும் தளர்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டில் படித்து முடித்து காத்திருக்கும் 500 பேர் உடனடியாக தங்கள் மருத்துவ பணியை தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு