ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்றவர்கள் கைது-போக்குவரத்து காவல்துறை
ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாக பைக் ரேஸ்களில் ஈடுபடுவர்கள்மீது காவல் துறை தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. வார இறுதி நாட்களில் பைக் சாகசங்கள், பைக் ரேஸ்கள் உள்ளிட்டவை அதிகளவில் நடைபெற்று வருவதைத் தடுக்க சென்னை காவல்துறை அதிக கவனம் எடுத்து சிறப்பு தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்யும் கடைகளாக அடையாளம் காட்டப்பட்ட கடைகளில் தணிக்கை செய்த காவல்துறையினர் அங்கு 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளைக் கண்டறிந்தனர். அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் பிரவீன் குமார், சரத்குமார் ஆகிய இருவரை தற்போது கைது செய்துள்ளனர். அண்ணா சாலையில் இருக்கும் 'சென்னை பைக்கர்ஸ்' மற்றும் ஆலந்தூர் 'நியூமெகா ஸ்டிக்கர்ஸ்' கடை உரிமையாளர்கள் இவர்கள். இருவரும் கைதுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கு மேலாக தண்டனை வழங்கப்படும்.
சில நாட்களுக்கு முன்பு பைக் ரேஸ்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீடியோக்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இப்படியான சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu