சென்னையில் 9 இடங்களில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில்  9 இடங்களில் புதிய மேம்பாலங்கள்
X

பைல் படம்.

நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகராட்சி இணைந்து சென்னையில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மேலும் 9 புதிய மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டுள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் கூட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி நகரின் முக்கிய இடங்களிலும் இன்னும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்களின் பெருக்கம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் வாகனங்கள், மக்கள் நெருக்கம் போன்றவற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாக நீடித்து வருகிறது.

இதற்கு தீர்வு காண 9 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. வேளச்சேரி சந்திப்பில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி மற்றொரு மேம்பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமாக முடிவடையும் நிலையில் உள்ளது.

மற்ற 5 மேம்பாலங்கள் கீழ்க்கட்டளை, பல்லாவரம், கொளத்தூர், ரெட்டேரி, கோயம்பேடு, வண்டலூர் ஆகிய இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

புதிதாக திட்டமிடப்பட்டுள்ள சில மேம்பாலங்களின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. 6 பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை 4 வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி சாலையில் உள்ள இந்திராநகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் "யு" வடிவில் 2 மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்கு ரூ.108.13 கோடி ஒதுக்கப்பட்டது.

மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.46.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர காட்டுப்பாக்கம், குன்றத்தூர், குமணன்சாவடி சந்திப்பில் ரூ.485 கோடி மதிப்பீட்டிலும், தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை 3.5 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை ரூ.322 கோடியில் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் பாடி மேம்பாலத்தின் இரு புறமும் ரூ.100 கோடியில் அகலப்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சி வியாசர்பாடி கணேசபுரத்தில் சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க ரூ.142 கோடியும், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.132 கோயில் மேம்பாலம் கட்ட ஏலம் கோரியுள்ளது.

இது தவிர நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம், மணலி சாலையில் எல்.சி. கேட் இடத்தில் மேம்பாலம், சின்ன நொளம்பூரில் உயர்மட்ட பாலம், கொருக்குப்பேட்டை ஆர்.ஒ.பி. கட்ட நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளது.

கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையை பூந்தமல்லி உயர்சாலையுடன் இணைக்கிறது. ஜீவன் நகரில் மேம்பாலங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் அருகே ஆஸ்பிரான் கார்டன் காலனி, ஜி.எஸ்.டி. சாலையில் எம்.கே.என். சாலை மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 புதிய மேம்பாலங்கள், பாலங்களுக்கான டி.பி.ஆர். விரைவில் தயாரிக்கப்படும்.

புதிதாக மேம்பாலங்கள் கட்டும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து ஒழுங்கு முறைகளை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் என வாகன ஒட்டிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்