சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக்குழு கூட்டம்

சென்னை பத்திரிகையாளர் மன்ற  நிர்வாகக்குழு கூட்டம்
X
மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் 2022 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் ச.விமலேஷ்வரன், தலைமையில் கடந்த 24.04.2022ம் தேதி ஞாயிறு அன்று கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கிராண்ட் ஓட்டல் முதல் தளத்தில் காலை 10:30 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவர் அ.செல்வராஜ் முன்னிலையில் புதிதாக சங்கத்தில் உறுப்பினராக இணைந்த பலருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல விசயங்கள் குறித்து கலந்து ஆலோசித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்திற்கு நேரில் வந்து கலந்துக் கொள்ள முடியாத மூத்த பத்திரிகையாளர்கள் பலர் காணொளி காட்சி (Video Call) மூலம் கலந்துக் கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து உரை நிகழ்த்தினர். மூத்த பத்திரிகையாளர்கள் ந.பா.சேதுராமன், சிந்து பாஸ்கர், ஆகியோர் கெளரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத் துணை தலைவர் செல்லப்பாண்டி, பொருளாளர் கோவிந்தராஜன், மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அ.பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்களான. ஹமீது, ராஜன்பாபு, வினோத்கண்ணன், அர்விந்த், அமானுல்லா, ராஜ்குமார், மோனிஷ்வரன், சீனிவாசன் ராவ்,மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற பழைய மற்றும் புதிய உறுப்பினர்கள், மேலும் கூட்டத்திற்கு பார்வையாளர்களாக பலர் வந்து கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு கலந்துக் கொண்ட அனைவருக்கும் துணை தலைவர் செல்லப்பாண்டிநன்றி தெரிவித்தார்.

Tags

Next Story