மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் மேம்பால பணி 30மாதத்திற்குள் நிறைவு பெறும்- சுனில் பாலிவால்

மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் மேம்பால பணி  30மாதத்திற்குள் நிறைவு பெறும்- சுனில் பாலிவால்
X
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் - சுனில் பாலிவால்

சென்னைத் துறைமுக ஆணையத் தலைவரும் காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநருமான சுனில் பாலிவால் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:

மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் 30 மாதத்திற்குள் பணிகளை முடிக்க உள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருட்களின் அளவு, வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து விரிவாக பேசினார். சென்னைத் துறைமுகம் நாட்டிலேயே அதிகளவில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது என்றார். மேலும், காமராஜர் துறைமுகம் நாட்டிலேயே நவீன வசதிகள் உடைய துறைமுகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதே வேளையில், செயலாக்கக் கட்டணம் மிகக் குறைவாக வசூலித்து நாட்டிலேயே முன்மாதிரியான துறைமுகமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சென்னைத் துறைமுகம் 2021 -2022ஆம் ஆண்டு நிதியாண்டில் 111 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாவும், காமராஜர் துறைமுகம் சுமார் 531.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரவாயல் - சென்னைத் துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது என்றும் கூறினார். மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பறக்கும் மேம்பால சாலை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்

இந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னைத் துறைமுக ஆணைய துணைத் தலைவர் அருண்குமார், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!