/* */

போலீசார் 28 பேருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சென்னை போலீஸ் கமிஷனர்

சென்னையில் போலீசார் 28 பேருக்கு வாழ்த்து அட்டைகளை வழங்கி போலீஸ் கமிஷனர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

போலீசார் 28 பேருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சென்னை போலீஸ் கமிஷனர்
X

பிறந்தநாள் காணும் போலீசாருக்கு வாழ்த்து அட்டை வழங்கும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நவம்பர் 2, 3,4 ஆகிய 3 தினங்களில் பிறந்த நாள் காணும் போலீசார் 26 பேருக்கு இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான போலீசாரின் பிறந்த நாளன்று, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை, பிறந்த நாள் கொண்டாடும் போலீசாரை நேரில் அழைத்து, அவர்களுக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 2, 3,4 ஆகிய 3 தினங்களில் பிறந்த நாள் காணும் போலீசார் 26 பேருக்கு இன்று (30.10.2021) நேரில் அழைத்து தனது வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டையை, காவல் ஆளிநர்களுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

மேலும், பிறந்த நாள் காணும் காவல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு, பிறந்த நாளன்று அவர்களுக்கு "விடுப்பு" அளிப்பதுடன், "வான்செய்தி" மூலம் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சார்பாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனரின் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் தங்களுக்கு கிடைத்ததினால் சென்னை பெருநகர போலீசார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, போலீஸ் கமிஷனருக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  5. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  6. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  7. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  8. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  9. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  10. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...