மெட்ரோ இரயில் சேவை மீனம்பாக்கம் முதல் வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா? -முதல்வர் பதில்

மெட்ரோ இரயில் சேவை  மீனம்பாக்கம்  முதல் வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா? -முதல்வர் பதில்
X
சென்னை மெட்ரோ இரயில் சேவை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீடிக்குமா?

சென்னை மெட்ரோ இரயில் சேவை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிப்பது தொடர்பாக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்:

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ இரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைக் கருதி, இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான இறுதித் திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!