லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணையும் இணைய வழி கொண்டாட்டம்

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணையும் இணைய வழி கொண்டாட்டம்
X

லயோலா கல்லூரி

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணையும் இணைய வழியிலான கொண்டாட்ட நிகழ்வை, இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளது.

லயோலா கல்லூரி, தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணையும் இணைய வழியிலான கொண்டாட்ட நிகழ்வை, இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளது. லயோலா கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

லயோலா கல்லூரி, தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணையும் இணைய வழியிலான கொண்டாட்ட நிகழ்வை, இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளது. நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 1 ந்தேதியில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ,ஒன்றிணைந்து கூடி கொண்டாடும் நிகழ்வு நடப்பது, மிகவும் பொருத்தமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இணைய வழி கொண்டாட்டத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரபலங்கள் பங்கேற்று உரையாடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தவிர, அதே நாளில், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் தங்கள் துறையில் தலைசிறந்து விளங்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து, லயோலா கல்லூரி சார்பில் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வாக, ஆன்மிக பேச்சாளரும் சிந்தனையாளருமான மஹாத்ரிய ரா கலந்து கொண்டு, வாழ்வை கொண்டாடுவோம்: வாழ்வை மாற்றும் அனுபவம் என்ற என்ற தலைப்பில் சிந்தனை உரை நிகழ்த்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஓ.பி. ஜிந்தால் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.ராஜ்குமார் கலந்துகொள்கிறார். இந்த இணைய வழியிலான சிறப்பு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!