சென்னை மாநகராட்சி தேர்தல்: அனைத்துக் கட்சிகளுடன் ககன் தீப்சிங் பேடி ஆலோசனை
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பிப். 19ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது
மேலும் வாக்குப்பதிவு 19 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட்-19 தொற்று பாதித்த நபர்கள் தகுந்த பாதுகாப்பு உட களை அணிந்து வாக்களிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக கடந்த 26ம் தேதி மாலை 6.30 மணி முதல் சென்னை மாநகராட்சி யின் 200 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது
சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திமுக சார்பில் வழக்கறிஞர் சந்துரு, அதிமுக சார்பில் பாலகங்கா, பாஜசார்பில் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசி யல் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம் இது. இதில் பதற்றமான வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது, கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது,
கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது கட்சி தொண்டர்களின் பொது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மைகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுக் கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் செய்யக்கூடாது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu