மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் வசதி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் வசதி
X

சென்னை விமான நிலையத்தின் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் 

ஐந்து மல்டிபிளக்ஸ்கள், சில்லறை விற்பனை கடைகள், குழந்தைகளுக்கான கடைகள், பார்கள் மற்றும் உணவகங்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இருக்கும்

சென்னை விமான நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி விரைவில் வரவுள்ளது. இது திறக்கப்பட்டால், டெர்மினல்கள் மாறுவதற்கு பயணிகள் வெளியில் சென்று மீண்டும் உள்ளே செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் சாலைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த கார் பார்க்கிங் டெல்லி விமான நிலையத்தில் உள்ளது போல இருந்தாலும், சில்லறை விற்பனை வசதி, திரையரங்கு மற்றும் வணிக வளாகம் உள்ளதால் அதைவிட மிகவும் மேம்பட்டதாக இருக்கும். இந்த வசதிகள் மார்ச் இறுதிக்குள் பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

கட்டிடத்திற்குள் நுழைவதற்கும் பல நிலை கார் பார்க்கிங்கிற்கும் சாலைகள் இணைக்கப்பட்டவுடன் சோதனை ஓட்டங்கள் தொடங்கும். மேலும் விமான நிலைய முனையம் மற்றும் பல நிலை கார் பார்க்கிங் கட்டிடத்திற்கு இடையே இரண்டு கூடுதல் சாலைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து தடையின்றி இருக்கும்

இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் ஐந்து திரை மல்டிபிளக்ஸ்கள், இரண்டு உணவு விடுதிகள், சில்லறை விற்பனை கடைகள், குழந்தைகளுக்கான கடைகள், பார்கள் மற்றும் உணவகங்களைக் கொண்டிருக்கும். அது மட்டுமின்றி, விமான நிலையத்திலிருந்தே பயணிகள் சாலை, புறநகர் ரயில் அல்லது மெட்ரோ ரயில்களுக்கு செல்லலாம் என்பதால், நாட்டிலேயே முதல் விமான நிலையமாக மல்டி மாடல் இணைப்பைக் கொண்டதாக சென்னை விமான நிலையம் இருக்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல நிலை கார் பார்க்கிங் அமைக்க விமான நிலையம் திட்டமிட்டுள்ளது.

சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, ஃபாஸ்டேக் ஒருங்கிணைப்பு மற்றும் அனைத்து டிக்கெட் கருவிகளும் நிறுவப்படும், இதனால் போக்குவரத்து தடையின்றி இருக்கும். தற்போது விமான நிலையத்தில் இருக்கும் பார்க்கிங் பல நிலை கார் பார்க்கிங்கிற்கு மாற்றப்படும்,

உள்நாடு மற்றும் சர்வதேச முனையம் ஆகியவற்றுக்கு மொத்தம் 2,000 கார்களை பார்க்கிங் செய்ய முடியும். இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்படும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!