சென்னையில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்

சென்னையில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்
X
வாடிக்கையாளர்களின் குறைகளை 7 நாட்களுக்குள் திருப்திகரமான முறையில் அவர்களுக்குத் தீர்த்து வைக்க பி.எஸ்.என்.எல் நடவடிக்கை.

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு மற்றும் திறந்தவெளி அமர்வு நவம்பர் 24-ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என பி.எஸ்.என்.எல் சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் டாக்டர் வி.கே. சஞ்சீவி அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த முகாம் தொலைபேசி வாயிலாக நடைபெறும். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, மாம்பலம், சென்ட்ரல், அடையாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 044- 28552216 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084760 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த துறைமுகம், கல்மண்டபம், கெல்லிஸ், மாதவரம், அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 044- 25395858 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445083639 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த செயின்ட் தாமஸ் மவுண்ட், குரோம்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 044- 22501122 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084018 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கோடம்பாக்கம், கே.கே.நகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 044- 23728877 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084745 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

வாடிக்கையாளர்களின் குறைகளை 7 நாட்களுக்குள் திருப்திகரமான முறையில் அவர்களுக்குத் தீர்த்து வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பி.எஸ்.என்.எல் சென்னை தொலைபேசியின் வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்