பாஜக ஊடகச் செயலாளர் குஷ்பூ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது

பாஜக ஊடகச் செயலாளர் குஷ்பூ  ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது
X

பாஜக ஊடகச் செயலாளர் குஷ்பூ

1.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது- ட்வீட்களும் தற்போது தெரியவில்லை

பாஜக ஊடகச் செயலாளர் குஷ்பூ ட்விட்டர் ஹேக் ஆகி இருக்காம்

பாஜக ஊடகச் செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்தார். தான் சொன்னது உண்மை என்று சாட்சி அளிக்கும் வகையில் காட்டுவதாக மே 7 ம் தேதி பத்திரிக்கை இணைப்பு ஒன்றையும் ட்வீட் செய்து இருந்தார். அது அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்டது என்றும் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது என்றும் திமுகவினர் ஆதாரங்களுடன் பதிவிட்டிருந்தனர். நெட்டிசன்கள் பலரும் #LiarKushboo என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை குஷ்புவுக்கு தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் ஹேண்டிலில் வேறு ஒரு பெயருடன் படமும் மாற்றப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் கணக்கில் உள்ள ட்வீட்களும் தற்போது தெரியவில்லை. 1.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ள நடிகை குஷ்புவின் இந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!