/* */

திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாடியும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் ஆற்றினார்கள்.

HIGHLIGHTS

திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில்  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என் அறிவித்தார்.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று 16.04.2022 சென்னை , இந்து சீனியர் பள்ளி மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடினார்கள். மேலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பாடியும், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் வி.என். அண்ணாதுரை அவர்கள் வரவேற்றுப் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் என்.ஆர். கார்க்கி நன்றியுரை ஆற்றினார்.

Updated On: 17 April 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?