சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்: சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம்

சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்: சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம்
X

சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள அருண்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதங்களை எழுப்பிய நிலையில், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம் 110-வது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்கவுள்ளார்.

Tags

Next Story
smart agriculture iot ai