திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் கலை நிகழ்ச்சி

திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் கலை நிகழ்ச்சி
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்கள். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார்.

அந்த வகையில் 04.12.2021 சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளைப் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று 23.04.2022 பன்னிரெண்டாவது வாரமாக சென்னை , ஸ்ரீசேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர், கோ.மணி "பாரதி நெறி" என்ற தலைப்பிலும், சிந்துஜா சந்திரமௌலி "பாட்டுடைக் கவிஞன்" என்ற தலைப்பிலும் மகாகவி பாரதியாரைப் பற்றி சொற்பொழிவாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து, வானவில் பண்பாட்டு மையம் சார்பாக, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்களின் சகோதரி கலைமாமணி நாட்டிய ஆச்சார்யா டாக்டர் ஸ்ரீகலா பரத், தேஜஸ் குழுவினரின் "வீரம் விளைந்த பூமி" என்ற தலைப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டு வீரர்களின் பங்கு குறித்த நடன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் வி.என். அண்ணாதுரை வரவேற்றுப் பேசினார். வானவில் பண்பாட்டு மையத் தலைவர் ரவி , ஒருங்கிணைப்பாளர் சோபனா ரமேஷ் அவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். எம். திவாகர் நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story