சென்னையில் சிறப்புப் பேருந்துகள் செல்லும் வழித்தடங்களின் விபரம் அறிவிப்பு

சென்னையில் சிறப்புப் பேருந்துகள் செல்லும் வழித்தடங்களின் விபரம் அறிவிப்பு
X

பைல் படம்.

சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள், இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2024 முதல் 14.01.2024 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 17.01.2024 முதல் 18.01.2024 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழு (07) வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வ.எண்

பேருந்து நிலையம்

பாதை மற்றும் இலக்கு

1

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் (SETC Buses)

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.

2

தாம்பரம் மெப்ஸ், அண்ணா பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி வழி:- விக்கிரவாண்டி.

3

கே.கே நகர் மாநகர பேருந்து நிலையம்

புதுச்சேரி,கடலூர், சிதம்பரம் வழி:- ECR

4

மாதவரம் பேருந்து நிலையம்

திருப்பதி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் வழி:- செங்குன்றம்

5

பூந்தமல்லி மாநகர பேருந்து நிறுத்தம் (பைபாஸ்)

காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஒசூர், தர்மபுரி வழி :- பூந்தமல்லி

6

தாம்பரம் வள்ளூவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிறுத்தம்.

காஞ்சிபுரம், வேலூர், ஆரணி வழி:- ஒரகடம்

7

கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிறுத்தம் (TNSTCபேருந்துகள்)

திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி(வழி திண்டிவனம்) பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சி, சேலம், வேளாங்கன்னி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை (TNSTC பேருந்துகள்)

அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் செல்லும் வழித்தடங்கள்:-

கோயம்பேடு CMBT லிருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் வழக்கம் போல் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

ஆம்னி பேருந்துகள் இ-ரோடு ஆம்னி சதுக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு பி- ரோடு வழித்தடம் சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக ஊரப்பாக்கம் சென்றடையும் வழி:– 400 அடி வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை).

ECR வழித்தட ஆம்னி பேருந்துகள் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இ-ரோடு வழியாக சென்று பி- ரோட்டினை அடைந்து அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை – போரூர் பைபாஸ் – இரும்புலியூர் – தாம்பரம் மேம்பாலம் – சேலையூர் கேம்ப் ரோடு - மேடவாக்கம் வலதுபுறம் OMR வழியாக சென்று ECR சாலையை அடையலாம்.

கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (OMR, ECR) வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, CMRL, ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் செல்லலாம்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பை நோக்கி செல்லும் கனரக வர்த்தக வாகனங்களுக்கு அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் ஜிஎன்டி சாலையில் ரெட்ஹில்ஸ், வெளிவட்டச் சாலை வழியாகத் திருப்பிவிடப்படும். புழல் தாம்பரம் புறவழிச்சாலையிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வணிக வாகனங்கள் (கனரக மற்றும் இலகுரக இரண்டும்) பாடி மேம்பாலத்தில் திருப்பிவிடப்பட்டு, சிடிஎச் சாலையை அடைவதற்குத் திருப்பிவிடப்படும்.

அனைத்து பயணிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!