ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை அண்ணா மேம்பாலம்

ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை அண்ணா மேம்பாலம்
X

சென்னை அண்ணா மேம்பாலம் 

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலையை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் என்ற பெருமையை பெற்ற அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது.

அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுவதையொட்டி மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என 8 இடங்களில் அழகிய கல்தூண்கள் அமைக்கப்படும்.

புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞரான ட்ராஸ்கி மருது கல்தூண்களுக்கு வடிவமைப்பு கொடுக்க உள்ளார். அண்ணா மேம்பாலத்தில் மொத்தம் 80 தூண்கள் உள்ளன. இதில் பல தூண்கள் பக்கவாட்டுச்சுவரால் மூடப்பட்டு உள்ளது. இதில் சில தூண்களை மக்கள் பார்க்கும் வகையில் அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

மேம்பாலத்தின் அருகே புல்தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்கள் அமைக்கப்படவும் உள்ளது. தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களும் சில பகுதிகளில் நிறுவப்படுகிறது

தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்கள் ஆகியவற்றை சிற்பங்களாகவும், ஓவியமாகவும் பிரதிபலிக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளும் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் அமைக்கப்படும்..

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு