சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
X

சென்னை விமான நிலையம் பைல் படம்.

தங்கத்தை அபகரிப்பதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் துபாயிலிருந்து இண்டிகோ விமானத்தில் முகமது தஷிம்(40), என்பவர் இலங்கை செல்வதற்காக வந்துள்ளார்.

சென்னையில் இறங்கி கொழும்பு செல்ல நேற்று நள்ளிரவு 1 மணியளவில் புறப்பட இருந்த நிலையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து அரை கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்துள்ளனர்.

வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அவரை இலங்கை செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு முகமது தஷிம் தங்கக் கட்டியை கொடுங்கள் நான் இலங்கையில் சென்று பார்த்து கொள்கிறேன் என முறையிட்டுள்ளார்.

இந்தியாவிற்குள் வரும் பயணிகளிடம் மட்டுமே சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்யும் விதி உள்ள நிலையில் பயணிகள் விமானம் மாறி செல்ல காத்திருக்கும் போது சோதனை மேற்கொள்ள கூடாது. எனவே அவர்கள் தங்க கட்டியை அபகரிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்