ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
X

மாநில தேர்தல் ஆணையம் ( பைல் படம்)

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக 6ம் தேதி ஆலோசனை செய்ய, அனைத்து அரசியல் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் செப் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த கால அவகாசத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டு உச்ச நீதி மன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கும் வாக்காளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக 6ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினருடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்யவுள்ளது.

இதனையொட்டி 6ம் தேதி மதியம் 12 மணி அளவில் அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil