சுறுசுறுப்பு- அமைதியான நடத்தை: குதிரைக்கு பாராட்டு பத்திரம் வழங்கிய ராணுவ அதிகாரி

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், தொடர்ந்து 11 பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றதை அங்கீகரிக்கும் வகையில், 'பிரின்ஸ்' என்ற குதிரைக்கு, ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மைய தலைவரின் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா மற்றும் பயிற்சி மையத்தின் முக்கிய விழாக்களில் பங்கேற்கும் குதிரைக்கு, ராணுவ உதவியாளர் குதிரை என்ற தனித்துவமான அந்தஸ்து உண்டு.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்(OTA) உள்ள 16 வயது 'பிரின்ஸ்' என்ற குதிரை, குதிரை படையில் மிகவும் அனுபவம் வாய்ந்தது. இங்கு ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பயிற்சி நிறைவு விழாவில் இது பங்கேற்கிறது. அதன் சுறுசுறுப்பு மற்றும் அமைதியான நடத்தை காரணமாக, அணிவகுப்பில் பங்கேற்க அது சிறந்த முறையில் தேர்வாகியது.
தொடர்ச்சியாக 11 பயிற்சி நிறைவு விழாவில் 'பிரின்ஸ்' பங்கேற்றதை அங்கீகரிக்கும் வகையில், அதற்கு ராணுவ பயிற்சி கட்டுப்பாட்டு மைய தலைவரின் (ARTRAC) பாராட்டு பத்திரத்துடன் கூடிய விருது கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வழங்கப்பட்டது. அந்த விருதை, பிரின்ஸ் குதிரைக்கு, சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் எம்.கே.தாஸ் இன்று அணிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu