கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பு-மக்கள் நல்வாழ்வுத்துறை
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு முழுவதும் கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பு கண்காணிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தமிழ்நாடு முழுவதும் கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பு கண்காணிக்கப்படும். கூடுதலாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தடுப்பூசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா 3 வது அலையால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என கூறுகின்றனர்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். மேலும் 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்.
கொரோனா 3வது அலை வருமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் -மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நேற்று மட்டும் 37,291 குணமடைந்தனர் மற்றும் 593 உயிரிழந்துள்ளனர்
மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை : 3,16,13,993
சிகிச்சையில் இருப்பவர்கள் : 4,08,920
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 3,07,81,263
உயிரிழந்தோர் எண்ணிக்கை : 4,23,810
இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் : 46,15,18,479
என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu