சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது பிசியாக நடித்து வரும் அவர், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதும், திருமணம் செய்யவுள்ளதும் தெரிந்த விஷயம். நட்சத்திர ஜோடியாக இருக்கும் இவர்கள் அடிக்கடி ஒன்றாக கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
சமீபத்தில் கூட சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வந்தார். அங்கு 1 மணி நேரம் வரை இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு இன்று தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வந்தார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் நயன்தாராவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu