/* */

மெட்ரோ ரயில் புதிய உச்சம்.. 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணம்

கடந்த 2022-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பேர் பயணம் செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

HIGHLIGHTS

மெட்ரோ ரயில்  புதிய உச்சம்.. 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணம்
X

சென்னை மெட்ரோ ரயில்.

கடந்த 2022-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பேர் பயணம் செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவையை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் துவங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும், சென்னை மெட்ரோ ரயில் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை செய்து வருகிறது.

மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்பொழுது சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.20 லட்சம் முதல் 2.30 லட்சம் வரை பயணிகள் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள் என்றும் 2021-ம் அண்டை விட 2022-ம் ஆண்டில் 3.56 கோடி பயணிகள் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கியதிலிருந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 1,18,56,982 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 2,53,03,383 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள். இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 15,88,08,208 கோடி பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 4 Jan 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்