சென்னை அண்ணா சாலையில் அடுக்கு மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் அடுக்கு மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து
X

சென்னை தீ விபத்து

சென்னை சாந்தி தியேட்டர் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.எழும்பூரில் இருந்து 4 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்

சென்னை அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்கின்றனர்.

மேலும் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தீ விபத்து நடந்த கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு துறையினர் மீட்டு வருவதாகவும் இதுவரை யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை அண்ணாசாலையில் முக்கிய பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!