9,11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்க அனுமதி

9,11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்க அனுமதி
X

பிப்ரவரி 8 ம் தேதி முதல் தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12 ம் வகுப்புகள் இயங்க அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள் 100 சதவித இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதே போல் இரவு 10 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன உட்பட பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி