9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனை

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனை
X

தலைமை செயலகம் (பைல் படம்)

செப்-15ம் தேதிக்குள் விடுப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று மாலை தலைமை செயலாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனையில் ஈடுபட்டார்

தமிழகத்தில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில் இன்று சுப்பரீம் கோர்ட் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் -15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!