சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 75-வது குடியரசு தின விழா

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 75-வது குடியரசு தின விழா
X
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோவில் 75-வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமா மு.அ.சித்திக் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், குடியரசு தின விழாவையொட்டி சக ஊழியர்களிடையே விளையாட்டுத் திறனைஊக்குவிப்பதற்காக மெட்ரோவில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பேட்மிண்டன், செஸ், கேரம், கிரிக்கெட், சுறுசுறுப்பான நடை (Brisk Walk), மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுப்போட்டிகள் ஏற்கனவே நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 47 நபர்களுக்கும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் 145 நபர்களுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாளருமான சித்திக் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள்மற்றும் இயக்கம்), முதன்மை பாதுகாப்பு அதிகாரி எச்.ஜெயலக்ஷ்மி, பொது ஆலோசக அலுவலர்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!