கே.கே.நகரில் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்ட காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை கே.கே.நகரில் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்களை தாக்கிய காவலர்கள் 6 பேரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் முதல் அவென்யூவில் நேற்றிரவு இரு திருநங்கைகளுக்கும் அங்கிருந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அந்ந வழியாக சென்ற இரவு பணியில் இருந்த துணை ஆணையர், அதை பார்த்துவிட்டு உடனடியாக விசாரணை நடத்த ரோந்து காவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர்கள் குமரன் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சசிகுமார், கே.கே நகர் காவலர் பாண்டி, முருகன், மணிகண்டன், மாரிமுத்து மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. இவர்கள் திருநங்கைகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திருநங்கைகள் பணம் கேட்டு காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டபோது, வாக்குவாதம் முற்றி காவலர்கள் திருநங்கைகளை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
விசாரணைக்குப் பின்னர் திருநங்கைகள் தன்னை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அடுத்தக்கட்ட விசாரணை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி, திருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்ட காவலர்களான சசிகுமார், பாண்டி, முருகன், மணிகண்டன், மாரிமுத்து, நாராயணன் ஆகிய 6 பேரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu