சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து
பைல் படம்
சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே நாளை முதல் 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சென்னை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட 55 மின்சார ரயில்கள்
வழித்தடம் | ரத்து செய்யப்பட்ட ரயில்களின் நேரம் |
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு | காலை 09:30, 09:56, 10:56, 11:40, நண்பகல் 12:20, 12:40 மற்றும் இரவு 10:40 மணி. |
சென்னை கடற்கரை - தாம்பரம் | காலை 09:40, 09:48, 10:04, 10:12, 10:24, 10:30, 10:36, 10:46, 11:06, 11:14, 11:22, 11:30, 11:50, நண்பகல் 12:00, 12:10, 12:30, 12:50 மற்றும் இரவு 11:05, 11:30, 11:59 மணி. |
சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி | இரவு 07:19, 08:15, 08:45, 08:55, 09:40 மணி. |
தாம்பரம் - சென்னை கடற்கரை | காலை 10:30, 10:40, 11:00, 11:10, 11:30, 11:40, நண்பகல் 12:05, 12:35, மதியம் 01:00, 01:30 மற்றும் இரவு 11:40 மணி. |
செங்கல்பட்டு - கும்மிடிபூண்டி | காலை 10:00 மணி. |
காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை | காலை 09:30 மணி. |
திருமால்பூர் - சென்னை கடற்கரை |
காலை 11:05 மணி. |
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை |
காலை 11:00, 11:30, நண்பகல் 12:00 மற்றும் இரவு 11:00 மணி. |
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை | இரவு 08:55, 09:45, 10:10, 10:25, 11:20 மணி, |
அதிகாலை முதல் காலை 09:20 மணி வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களின் கால அட்டவணை
வழித்தடம் | சிறப்பு ரயில்களின் நேரம் |
சென்னை கடற்கரை - பல்லாவரம் | காலை 09:30, 09:50, 10:10, 10:30, 10:50, 11:10, 11:30, 11:50, நண்பகல் 12:10, 12:30, 12:50 மற்றும் இரவு 10:40, 11:05, 11:30, 11:59 மணி. |
பல்லாவரம் - சென்னை கடற்கரை | காலை 10:20, 10:40, 11:00, 11:20, 11:40, நண்பகல் 12:00, 12:20, 12:40, மதியம் 01:00, 01:20, 01:40, இரவு 11:30, 11:55, நள்ளிரவு 12:20, 12:45 மணி. |
கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு | காலை 10:45, 11:10, நண்பகல் 12:00, 12:50, மதியம் 01:35, 01:55 மற்றும் இரவு 11:55 மணி. |
செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி | காலை 10:00, 10:30, 11:00, 11:45, நண்பகல் 12:30, மதியம் 01:00 மற்றும் இரவு 11:00 மணி. |
பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்களின் ரத்து குறித்த விவரங்களை ரயில் நிலைய அறிவிப்பு (Station Announcement) / அறிவிப்பு பலகைகள் மூலமாகவும், மேலும் செய்தித்தாள்கள், டிவி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் (Passenger Help Desk) ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும் / டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் உதவிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளது.
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிடும்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu