ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
X

நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் கொரியா் பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பழைய விமானநிலையத்திற்கு நேற்று இரவு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த சரக்கு பாா்சல்கள் மற்றும் கொரியா் பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது நெதா்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முகவரிக்கு ஒரு கொரியா் பாா்சல் வந்திருந்தது. அந்த பாா்சலினுள் என்ன இருக்கிறது என்று குறிப்பிடவில்லை.இதனால் சுங்கத்துறையினா் கொரியா் பாா்சலில் இருந்த செல்நம்பரை தொடா்பு கொண்டனா். ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதோடு கன்னியாகுமரி முகவரியும் போலி என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த கொரியா் பாா்சலை பிரித்து பாா்த்தனா். அதனுள் மிகவும் விலை உயா்ந்த 95 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அதோடு இது சம்பந்தமாக சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!