சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

பள்ளி மாணவர்கள் (கோப்பு படம்).

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அருகே வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 நாட்கள் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்னும் மீட்பு பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் பள்ளி குழந்தைகள் மழை நீரில் தவறி விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் மாநில அரசின் பள்ளி கல்வி துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் பல இடங்களில் பள்ளிக்கூடங்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business