2.55 கிலோ தங்கம் - எலக்ட்ரானிக் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

2.55 கிலோ தங்கம் - எலக்ட்ரானிக் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
X

உளவுத்தகவல் அடிப்படையில் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு விமானங்களில் வந்த 5 பயணிகளிடம் சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 10 பொட்டலங்களில் தங்கப்பசையை உடலுக்குள் மறைத்துவைத்து கடத்தி வந்தனர். அவற்றிலிருந்து 2.55 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களும் சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் தொடர்பாக 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!