புயல் மழை, வெள்ளம்: சென்னையில் இதுவரை 17 பேர் உயிரிழப்பு

புயல் மழை, வெள்ளம்: சென்னையில் இதுவரை 17 பேர் உயிரிழப்பு
X

சென்னையில் வெள்ள மீட்புப் பணிகள் 

சென்னையில் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 'மிக்ஜம்' புயல் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கி தவிப்போரை பேரிடர் மீட்பு படையினரும், காவல் துறையினரும் ரப்பர் படகு வாயிலாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். அதேபோல, 69 இடங்களில் சாலையில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து மின்சாரம் பாய்ந்தும் என வெவ்வேறு நிகழ்வுகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அஸ்பிரின் கார்டன் அருகே தேங்கிய மழைநீரில் ஐ.சி.எப்., தலைமைக் காவலர் ருங்மாங்கதன், 48, உயிரிழந்து கிடந்தார்.

உயிரிழந்தோர் விபரம்

துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து கணேசன் (வயது 70) என்பவர் உயிரிழந்தார்.

வீட்டில் தேங்கிய மழை நீரில் மூழ்கி மயிலாப்பூரில் பெருமாள் (வயது 64) என்பவரும், தலைமை செயலக குடியிருப்பு பகுதியில் ருக்மாங்கதன் (வயது 48) என்பவரும், மடிப்பாக்கம் பகுதியில் சாமிக்கண்ணு (வயது 85) என்பவரும், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தாமோதரன் (வயது 40) என்பவரும், சூளைமேடு பகுதியில் செல்வம் (வயது 50) என்பவரும் உயிரிழந்தனர்.

மரம் விழுந்து பிராட்வே பகுதியில் ஆனந்தபாபு (வயது 35) என்பவரும், பெசன்ட் நகர் பகுதியில் முருகன் (வயது 35) என்பவரும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களின் விபரங்கள் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை. அடையாள தெரியாத நபர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

.புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து இல்லை. 16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself