சென்னை விமான நிலையத்தில் 1422 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1422 கிராம் தங்கம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

சென்னை விமான நிலையத்தில் 1422 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணியை இடைமறித்து சோதனையிட்டதில், 6 பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 725 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.37.25 லட்சமாகும்.

மற்றொரு நிகழ்வில் கொழும்பில் இருந்து வந்த ஆண் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு பண்டல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. 697 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.35.82 லட்சமாகும்.

1962 சுங்கச்சட்டத்தின் கீழ், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் 1422 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 73.07 லட்சமாகும். இது குறித்த மேல் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய கூடுதல் சுங்கத்துறை ஆணையர் திரு கே பி ஜெயகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!