மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து

மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் மணிக்கு 80 கி.மீக்கும் அதிகமாக சூறைக்காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மழையினால் சென்னையில் தரை வழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் நிலவி வரும் புயல், மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் 13 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டிசம்பர் 4 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658), மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634), மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694), விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (22662), தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16752), மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651), திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606), குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Tags

Next Story