சோழிங்கநல்லூர்- சிப்காட் மெட்ரோ இரயில் பணிகளுக்கு ரூ.1134 கோடியில் ஒப்பந்தம்

சோழிங்கநல்லூர்- சிப்காட் மெட்ரோ இரயில் பணிகளுக்கு ரூ.1134 கோடியில் ஒப்பந்தம்
X

சோழிங்கநல்லூர்- சிப்காட் மெட்ரோ இரயில் பணிகளுக்கு ரூ.1134 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சோழிங்கநல்லூர்- சிப்காட் மெட்ரோ இரயில் பணிகளுக்கு ரூ.1134 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3-ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை ரூ.1134 கோடியே 11 லட்சம் மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலைய பணிகளுக்கு ஒப்பந்தமானது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1134 கோடியே 11 லட்சம் மதிப்பில் இரயில் விகாஸ் நிகம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியாகும். இது சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தம் ஆகும்.

ஒப்பந்தத்தின் நோக்கம் உயர்மட்ட வழித்தடம் (தோராயமாக 10 கிமீ நீளம்) அமைத்தல் மற்றும் 9 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களை அமைப்பதை உள்ளடக்கியது. சோழிங்கநல்லூர் ஏரி-, ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் (சோழிங்கநல்லூர் ஏரி-II), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செம்மஞ்சேரி-I), செம்மஞ்சேரி-II, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட் -2.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் மற்றும் இரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் சார்பாக முதுநிலை துணைப் பொது மேலாளர் சௌத்ரி ரஜ்னீஷ் குமார் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் கே.பிரதீபன், பொது ஆலோசகர்கள் மற்றும் இரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இலவச பார்க்கிங்:

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் வாகனத்தை மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது. இந்த விரிவுப்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

மெட்ரோ இரயில் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையை பயன்படுத்தி நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை 28.04.2023 முதல் 31.05.2023 வரை எந்த கட்டணமும் இல்லாமல் நிறுத்தி கொள்ளலாம்.

மெட்ரோ இரயில் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் தங்கள் வாகனங்களை வசதியாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil