சென்னையில் மழை 9 விமானங்கள் தாமதம்

சென்னையில் மழை 9 விமானங்கள் தாமதம்
X

சென்னை விமான நிலையத்தில் தொடா்மழை காரணமாக 9 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து தொடா்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகள் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஏரோபிரிட்ஜ் மூலமாக பயணிகளை ஏற்றி செல்லும் விமான சேவைகளில் ஏந்த பாதிப்பும் இல்லை.ஆனால் ஏரோபிரிட்ஜ் இல்லாமல் பயணிகளை பிக்கப் பஸ்களில் ஏற்றி சென்று விமானங்களில் ஏற்றி அனுப்பக்கூடிய விமானங்கள் மட்டும் புறப்பட்டு செல்கின்றன. அதற்கு காரணம்,தொடா்மழை காரணமாக பயணிகள் பிக்கப் பஸ்களில் ஏறுவதும்,லேடா்கள் வழியாக விமானத்தில் ஏறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று பகல் 2 மணி வரை தூத்துக்குடி, பூனே, கமதாபாத்,திருவனந்தபுரம்,பாட்னா,ஹீப்லி ஆகிய 6 விமானங்கள் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.அதைப்போல் சா்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் லக்கேஜ்கள் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் துபாய்,ஷார்ஜா,இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்லும் 3 சிறப்பு விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

Tags

Next Story
ai future project