சென்னையில் ரூ.4.5 கோடி தங்கம் பறிமுதல்

சென்னையில் ரூ.4.5 கோடி தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த 3 சிறப்பு விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புடைய 8.5 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து 3 சிறப்பு விமானங்கள் சென்னை விமானநிலையம் வந்தன.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை,நாகப்பட்டினம்,திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 18 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அவா்கள் அணிந்திருந்த மாஸ்க்குகள்,உள்ளாடைகள்,பேண்ட் பெல்ட்டுகள்,பாக்கெட்கள் என்று பல்வேறு பகுதிகளில் தங்க பேஸ்ட்கள், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். 18 பயணிகளிடமிருந்து மொத்தம் சுமார் 8.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி என கூறப்பட்டது .இதையடுத்து 18 பேரையும் சுங்கத்துறையினா் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!