சென்னையில் 18ம் தேதி ஐபிஎல் ஏலம் துவக்கம்

சென்னையில் 18ம் தேதி ஐபிஎல் ஏலம் துவக்கம்
X

சென்னையில் வரும் 18 ம் தேதி நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், 14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.அதற்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த 56 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!