பிரபல நகை கடையில் ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு

பிரபல நகை கடையில் ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு
X

சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் ரூ.1000 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறார்.

பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, மும்பை, கோவை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. அது போல் கணக்கில் வராமல் 1000 கோடி இருப்பது கண்டறியப்பட்டது.தங்க வியாபாரி கணக்கில் காட்டாத பணம், போலியான வருவாய் கணக்கு, போலி கணக்குகளில் பண வரவு போன்றவை தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.




Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!