சென்னையில் புத்தக கண்காட்சி தொடக்கம்

சென்னையில் புத்தக கண்காட்சி தொடக்கம்
X

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் 44-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்ற தொடக்கவிழாவில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை வாசகா்கள் அனுமதிக்கப்படுவா்.

நுழைவுக் கட்டணம் ரூ.10. இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி மாணவா்களுக்கு கட்டணம் இல்லை.பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும். வாசிப்பை வளா்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags

Next Story
ai healthcare products