சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமல்

சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமல்
X

மெட்ரோ ரயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண விபரங்களை வெளியிட்டது. அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது.ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவிதமும், கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!