தமிழகத்திற்கு மத்திய அரசு உதவுகிறது -நிர்மலாசீதாராமன்

தமிழகத்திற்கு மத்திய அரசு உதவுகிறது -நிர்மலாசீதாராமன்
X

தமிழ்நாடு வளர்ச்சி அடைய, மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்தியபட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் சென்னை - தியாகராயநகரில் தொழில் துறையினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், தேசிய மின்னணு விவசாய விற்பனை முறை தமிழ்நாட்டிலும் படிப்படியாக அமலுக்கு வரும் என்றார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!