மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு- முதல்வர் அறிவிப்பு

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு- முதல்வர் அறிவிப்பு
X

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 29.6.2015 இல் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் சேவையை தொடக்கியது. 5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6 ஆம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!