ராணுவடாங்க், ரயில்கள்- நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு

சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்கை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து விமானத்தில் கிளம்பிய பிரதமர் மோடி சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்க் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்க மேடைக்கு சென்ற பிரதமர் மோடி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதே போல் சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில்,சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை,ரூ.400 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

Tags

Next Story
smart agriculture iot ai